Wednesday, 2 September 2015

 ! ! ! நினைவு மடல் ! ! !

தாயின் மடியிலிருந்து இறைவனின் திருவடியில் சரணடைந்த சகோதரனுக்கு……

          ஆணவ ஆத்மாவிற்கு அடிமையாகி
          அன்பில் வண்மையுடைய உறவுக்கு துாரமானாய்!

          ஆசானின் கொடுமைக்கு உள்ளாகி
          வளமெய்த துறவுபூண்ட தந்தைக்கு துயரினை பரிசளித்தாய்!

          கடத்தில் தரம்பெற்று வரவாழ்வில் சுகமிழந்தாகி
          தன்னுடலை மண்ணுக்களித்து இறைவனகம் நுழைந்தாய்!

          வாழ் வழங்கிய உற்றத்திற்கும் - அதற்கு
          மனம் தூவிய சுற்றத்திற்கும் - அனைத்தினதும்
          துறவறமெய்திய தந்தைக்கு தாமளித்த விந்தை என்ன?


சகோதரனே!

          சிறுவயதில் பெரும் கடம்பெற்றாய் – மனதிடமின்றி?
          கல இடம்பெயர்ந்தாய் – திட தோழமையற்றி?
          திரவக வாழ்கையைப் அடைந்தாய் – தன்னிலையிடறி?
          தன் உறவறியாது வாழ்ந்தாய் – சுகமின்றி?
          கொடுங்கோள் ஆசானாலும் கொடும் கனலாலும் – கொள்கையின்றி?
          வரமாய் பெற்ற வாழ்வினை துறந்தாய் –விருப்பமின்றி??

விடையறிய துயில் கொண்ட களம் புகழிடமாக தம் ஆத்மாவிற்கு விளங்க என் வேண்டுதலுடன் கூடிய என் குறு நினைவு (02.09.2015) மடல்…..

இப்படிக்கு,                         

நீங்கா நினைவுகளுடன்               

உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள்…..

பாசத் தலைவனுக்கு பணி நிறைவு(31.08.2015) பாராட்டு விழா…………

அன்பின் ஆருடமாக – அறத்துடன்

     ஆரோக்கியத்தின் இருப்பிடமாக – ஆற்றலுடன்

இன்னல் உதிர்க்கும் - கனலுடன்

     ஈகையின் ஈழமாக – அளவறிந்து

உண்மையின் ஊற்றாக – உளவறிந்து

     ஊனற்ற எண்ணத்துடன் - குற்றமிலகி

எம்மதமும் என்மதமாக - திறனறிந்து

     ஏளனமற்ற என்னன்புடன் - குணமறிந்து

ஒருமைபாடு ஓங்கி – ஒரே தலையாக

With my first professional superior Mr. Murugesan sir 

                    முதுமையில் இளமை பெற்று

                    ஐயம் உதிர்ந்து - பாசக்கயிராக

                    முத்தமிழ் இனிமையுடன் : முக்கனி சுவையுடன்

                    இளந்தளிருடன் இன்பமாக

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்………..



இப்படிக்கு             

‘தன்னம்பிக்கை உடையவன் 

மற்றவனுக்கு மண்டியிடமாட்டான்’  என்ற கூற்றுடன்



ஐயம் உதிர்த்த பாசக்கயிராக அறனுடம்பெய்தி அகப்புறத்தில் வாழும் அடியேனின் மாணவன்……………………….