Monday, 4 December 2017

முத்திரை பதித்த சரித்திர தலைவிக்கு முதலாம் ஆண்டு நினைவு(05.12.2017)....


திரையில் சிறந்து மக்கள் மனதில் மரமாய் உயர்ந்த அறவழி மலரே... ஆளுமையின் அடையாளமே...

சதியாடிய சபை கயவர்களின் விதியை மதியால் மாற்றிய புரட்சித்தலைவியே... புன்னகை திலகமே....

வஞ்சகத்தில் சிறை தள்ளிய நரிகளுக்கு மக்கள் நெஞ்சகத்தில் இடமின்றி வெற்றி வாகை சூடிய விவேகத்தின் விளக்கே....ஆணவனை அலற வைத்த திராணி சுடரே....

பெண்ணுரிமைக்கு முன்னுரிமை என்ற திராவிட கொள்கையை செயலாக்கி கொடியேற்றிய வெற்றித்திலகமே.... வேள்வியில் உதித்த ஞானத்தின் பிறவியே...


உற்ற உறவின்றி உலகே உறவென சிரம் உயர்த்திய சிம்ம ராசி பிறப்பே... சிந்தையே சிகரமென விந்தையில் வளர்ந்த பாசமலரே.....





உலக அன்னையே அணைத்த எங்கள் அன்னையே.....உணர்ந்த நினைவில்லை உன் இழப்பை...

தங்கள் அறவழி தரம் கொண்ட ஆளுமையை இழந்த எங்களின் முதலாம் ஆண்டு நினைவு மலர்....


- த.கவியரசன்